Namakkal: Illegally bought a kidney for Rs. 10 lakhs?! Trichy, Perambalur private hospitals?! Police, medical officials are investigating intensively!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழை எளிய மக்களிடம், சட்டவிரோதமாக ஏஜன்டுகள் மூலம் கிட்னி மாற்றம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியான NEWS 24×7 என்ற TV சேனலில். அந்த செய்தி ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் புலன்விசாரணை படத்தில் வருவதை போன்று ஏழை எளிய மக்களுக்கு பணத்தாசை காட்டி கிட்னி ஒன்றுக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும், அதற்கு அப்பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஏஜன்ட் ஆனந்தன் என்பவர் 10 லட்சத்தில் ரூ. 5 லட்சம் மட்டும் கொடுத்ததாகவும், மீதியை தராமல் இருப்பதாகவும் அந்த பெண் தெரிவிக்கிறார். மேலும், திருச்சியை சேர்ந்த சிதார் மருத்துவமனை, ஆளும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை மற்றும் தஞ்சாவூரில் ஒரு மருத்துவமனையையும் தெரிவிக்கிறார். இந்த செய்தி திருச்சி, பெரம்பபலூர், தஞ்சாவூர் சுற்று வட்டார மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் போலீசார் ஒரு கிட்னி விலை பேசிய ஏஜன்டுகளையும், மருத்துவ குழுவினர் எப்படி ஆதாரில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்து கிட்னியை எடுத்தார்கள் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை, மேலும், இது குறித்து மத்திய அரசின் மருத்துவகுழுவினரும் நாளை பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்வபம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.