Tamilnadu C.M., K.Palanisamy opened the Perambalur Integrated Labor department offices through in Video Conferance

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி, பெரம்பலூர; மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எம்.பிக்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோர்களது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதன்படி, இதுநாள் வரை வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், தொழிலாளர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்க உள்ளன.

மேலும், பெரம்பலூர; மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் 50 செண்ட் இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளம் தலா 500 சதுர மீட்டர் பரப்பளவில் 9 அறைகளுடன் கூடிய அழகிய வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழிலாளர் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் இராதாகிருஷ்ண பாண்டியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகமதுயூசுப் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!