Perambalur: 108 Thiruvilakku Puja on Pournami days at Siruvachur Madura Kaliamman Temple: Collector Arunraj, MLA Prabhakaran inaugurated
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூ் கலெக்டர் ச.அருண்ராஜ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை நேற்றிரவு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பவுர்ணமி தினங்களில் 20 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்திடும் விதமாக மேலும் 5 அம்மன் திருக்கோயில்களில் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 108 திருவிளக்கு பூஜையில், 108 பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்ததை கலெக்டர் அருண் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் மற்றும்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில், பணியாளர்கள் செல்வம், கோவிந்தராஜு வெங்கடேசன், கோவில் பரம்பரை தர்ம கர்த்தாக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.