Perambalur: 7th round of Foot-and-mouth disease vaccination campaign to begin the day after tomorrow for Cattle; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் 4 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், 4 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் தகுதியுள்ள 1.19 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் (NADCP) கீழ் 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ஜூலை 31 ஆம்தேதி வரை உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

4 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவையில் உள்ள, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் எருதுகளுக்கும் தடுப்பூசி பணி முகாம்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண் கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடர்பான விபரங்களை Bharat Pashudhan Portal – இல் பதிவேற்றம் செய்யப்படுவது ஒன்றிய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவேஈ கால்நடை வளர்ப்போர், கால்நடை பராமரிப்புத் துறையினர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி பணிக்கு வரும்பொழுது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100% கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!