Perambalur: A livestock breeding and fodder development building constructed at a cost of Rs. 50 lakhs was inaugurated by Chief Minister M.K. Stalin via video conference.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டடத்தினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 37 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை கிளை நிலையங்கள், 2 பார்வை கிளை நிலையம் உள்ளடக்கிய மொத்தம் 44 நிலையங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமையினங்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல். சினை ஆய்வு, கன்று ஆய்வு, மற்றும் தரமற்ற காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையங்களுக்கு தேவையான உறைவிந்து குச்சிகள், திரவ நைட்ரஜன், செயற்கைமுறை கருவூட்டலுக்கான விநியோகம், கால்நடை இனவிருத்தி மற்றும் பெருக்கம் பணிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் இந்த அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இந்த அலுவலகத்திற்காக ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து கலெக்டர் மிருணாளினி குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு. பேபி நிர்மல் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.மூக்கன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.குமார் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497