Perambalur: A lorry carrying paint waste caught fire and was damaged!
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை பெயிண்ட் கழிவுகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இருந்து பெயிண்ட் கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று இரவு கரூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு புறப்பட்டது. லாரி, பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து துறையூர் புறவழிச் சாலையில் அதிகாலை சுமார் 2:30 மணிக்கு சென்றுக் கொண்டிருந்த போது லாரி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை அறிந்த டிரைவர் பாதுகாப்பான இடத்தில் லாரியை ஓரமாக நிறுத்தியதோடு, குதித்து தப்பி பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் விபத்தை தவிர்த்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் புறவழிச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.