Perambalur: A public meeting to observe Martyrs’ Day was organized by the district DMK Students’ Wing! District In-charge V. Jagadeesan and Students’ Wing Organizer Thanga. Kamal issued a joint statement.


மொழிப்போர் தியாகிகளை போற்றிடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25.01.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா.இள. வரவேற்புரையில், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் (எனது) முன்னிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது.
இதில் மாநில விவசாய அணி செயலாளர் அன்னியூர் சிவா.எம்.எல்.ஏ., மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் நடிகர் போஸ்.வெங்கட், எம்.பிரபாகரன். எம்.எல்.ஏ.,கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சேர்க்காடு கென்னடி, தலைமை கழக இளம் பேச்சாளர் நா.காருண்யா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தாரத்தன்,குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.இளையராஜா நன்றி கூறுகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,வார்டு, கிளை கழக செயலாளர்கள், கழக பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிற்பிக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் இருவரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497