Perambalur: A resolution was passed at the VCK meeting to establish an equality village in Eraiyur!

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் புதுக்குடியிருப்பு பகுதியில் விசிக-வின் வேர்களைத் (மக்களை) தேடி, முகாம் மறுசீரமைப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், எறையூர் புதுக்குடியிருப்பு பகுதி மற்றும் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் மின் விளக்கு வசதி மற்றும் சிமெண்ட், தார் சாலை, பாலம் ஏற்படுத்தி தரவேண்டியும், ராமகிருஷ்ணா தபோவன நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எறையூர் நேரு பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் மீதான இந்துத்துவா சாதிய மனப்பான்மையுடன் நடந்து வருவதை தடுத்து நிறுத்தி தமிழக அரசு பள்ளியாக மாற்றி மாணவர்களுக்கு முன்னேறிய கல்வியை வழங்க வேண்டுமென்றும், சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எறையூர் ஊராட்சிக்கு சமத்துவபுரமும், குற்ற சம்பவங்களை குறைப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விவசாய பிரிவு மாநில செயலாளர் வீர செங்கோலன், மாநில துணைச் செயலாளர் க.பொ.வி.இ வழக்கறிஞர் அண்ணாதுரை, தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் கராத்தே பெரியசாமி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் அழகுமுத்து, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் இடி முழக்கம், மு.மா.க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அய்யம்பெருமாள் , மற்றும் எறையூர் புதுக்குடியிருப்பு முகாமை சேர்ந்த கிளைச் செயலாளர் காங்கேயன், சக்தி பாலன், மணிகண்டன், மதி உள்ளிட்ட முகாம் பொறுப்பாளர் திரளாக கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497