Perambalur: All trade unions to go on strike – picket campaign, pressing for demands including free drinking water, healthcare, education!
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும்…தொழிலாளர் விரோத 4 தொகுப்புச் சட்டங்களை திரும்பபெறு என வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, உணவு, மருந்து, விவசாய இடுபொருட்கள், மற்றும் விவசாய இயந்திரங்கள் ஆகிய அத்தியாவசிய சரக்குகள் மீது ஜி.எஸ்.டி வரியை நீக்கவும், மின்சார திருத்த மசோதா 2022-யை திரும்பபெறுக, வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமை ஆக்கிட கோரியும், இலவச கல்வி, சுகாதார உரிமை, குடிநீர் மற்றும் அனைவருக்கும் வீட்டுவசதி உறுதிபடுத்தவும், கிராமபுற வேலை உறுதி சட்டத்தை ஆண்டுக்கு 200 நாட்கள் எனவும், தினக்கூலி ரூ.600/- எனவும் உயர்த்தி வழங்கிட கோரியும், LPF, CITU, AITUC, U.T.U.C,, AIKS, AIAWU மத்திய தொழிற்சங்கங்கள் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பெரம்பலூரில் ஜூலை 9 நடைபெறக்கூடிய அகில இந்திய வேலை நிறுத்தம் – மறியல் பிரச்சாரம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நேரடி வீதி காந்தி சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் கே. கே .குமார், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி, Aituc தொழிற்சங்க நிர்வாகி ராஜேந்திரன், CITU சார்பாக ரங்கநாதன், ரங்கராஜ், பரமசிவம் குணசேகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.