Perambalur: Application camp for admission to Central Footwear Training Institute; Collector information!
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான CFTI பயிற்சி மையத்தில், காலணி தொழில்நுட்பத்தில் நீண்ட கால மற்றும் குறுகிய கால படிப்புகளை வழங்கி வருகிறது.
பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தொடங்கப்பட்ட காலணி தொழிற்சாலைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆள் சேர்க்கை முகாம்களை ஏற்பாடு செய்வது உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் பிராந்தியத்தின் காலனி துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டு சிஎப்டிஐ பயிற்சி மையத்தில் காலணி தொழில்நுட்பத்தில் நீண்ட கால படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப முகாம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக, பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் எதிர்வரும் ஜீலை-25,26 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்கான கல்வித் தகுதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விருப்பம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல்விவரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளரை 90259 97996 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.