Perambalur: Auction of used government vehicles; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.07.2025 அன்று காலை 11.30 மணியளவில் கழிவு செய்த 8 அரசுத்துறை வாகனங்கள் TN 46 G 0555 Hindustan Motors Ambassdor, TN 46 G 1010 Mahindra Bolero, TN 46 G 1090 Mahindra Bolero, TN 46 G 0390 Mahindra Bolero, TN 46 G 1020 Mahindra Bolero, TN 46 G 0150 Mahindra Bolero, TN 46 G 1040 Mahindra Bolero மற்றும் TN 46 G 0154 Mahindra Bolero ஆகிய வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. மேற்கண்ட வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் மேற்குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் பார்வையிடலாம்.
வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புபவர்கள் வருகின்ற 23.07.2025 அன்று ஏல நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50/- (ரூபாய் ஐம்பது) செலுத்த வேண்டும், மேலும் பிணை வைப்புத்தொகை ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) தொகையாக செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம். ஏலம் எடுக்காதவர்களுக்கு பிணை வைப்புத்தொகை மீள வழங்கப்படும்.
அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்கப்பட்ட ஏலதாரர் முன் பிணை வைப்புத்தொகை போக ஏலத்தொகையில் 100% மற்றும் அதற்கான 18% GST தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும். அவ்வாறு உடனடியாக செலுத்த தவறும் பட்சத்தில் ஏல நிபந்தனைகளை பின்பற்றாது நடந்து கொண்டதற்காக வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படாததுடன் மறு ஏலம் நடத்தப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்ளும் முன்பு வாகனத்தை பார்வையிட்டுக்கொள்ள வேண்டியது அவரவர்களின் முக்கிய பொறுப்பாகும். ஏலம் ஊர்ஜிதம் செய்த பின்பு வாகனத்தில் குறைபாடுகள் ஏதும் கூறப்படுமானால் அவை ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. மேலும், மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் அவர்களின் முடிவே இறுதியானதாகும். ஏலம் எடுத்தவர்கள் சீருந்தின் (RC) புத்தகத்தினை தனது சொந்த செலவிலேயே மாற்றம் செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுப்பவர் தங்களுடைய தனி நபர் ஆதார் மற்றும் அவரின் சொந்த பெயரில் GST எண் வைத்திருத்தல் மிகவும் அவசியம்.ஏலத் தேதியினை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளவோ ரத்து செய்யவோ கலெக்டருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலம் கேட்டிட தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.