Perambalur: Camp to provide National Identity Cards to the differently-abled on every Tuesday; Collector’s information!

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது செவ்வாய் கிழமைகளில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வந்த முகாம் ஆகஸ்ட்-2025 மாதம் முதல் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளன.

அடையாள அட்டை பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -4, ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு வந்தால் சிகிச்கை தொடர்பான மருத்துவ அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!