Perambalur: Car-bus collision; 4 dead, 3 injured!

தூத்துக்குடியில் இருந்து 34 பயணிகளுடன் சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தது. ஆம்னி பஸ் பின்பு, இதே வழித்தடத்திலல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தனியார் வாடகை கார் ஒன்று 2 பெண்கள் உட்பட 7 பயணிகளுடன் சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்துறைமங்கலம் 3 ரோட்டுக்கும்-4 ரோட்டுக்கும் இடையே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்ற போது, முன்னால் சென்ற ஆம்னி பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.திடீரென நிகழ்ந்த இந்த சாலை விபத்தில், காரில் பயணித்த ராமநாதபுரம் மாவட்டம், ராசிகுளம் அருகே உள்ள பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன்(30), கண்ணாயிரம் மகன் காஜா என்கிற காளீஸ்வரன்(25), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் ஓரி வயல் அருகே உள்ள முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக்(38), மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சாலை விபத்துகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதுக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.மேலும் இந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் ஓரி வயல் அருகே உள்ள முதுகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் (22), மற்றும் காரில் பயணித்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள ஓரி வயல் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி சூர்யா(35), தேவிபட்டினத்தை சேர்ந்த ஜான் கென்னடி(35), மற்றும் சரண்யா(23), ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த நான்கு பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் கார்த்திக் மனைவி சூர்யா திருச்சியில் சிகிச்சை என்பது உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் பயணம் செய்து விபத்தில் இறந்து போன கார்த்தியின் சகோதரர் ரஜினி குமாரின் திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்னையில் வேலை பார்த்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களான இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி வாடகை காரில் புறப்பட்டு வந்தபோது விபத்து நிகழ்ந்ததும் கார் டிரைவர் கண்ணதாசன் கண்ணயர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என்றும்தெரிய வந்துள்ளது.இதனால் ஆம்னி பஸ் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்தில் உள்ள நாசரேட் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ராஜசீலன்(45), என்பவரிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்தது இந்த விபத்து சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!