Perambalur: Collector takes steps to pay college fees from his own discretionary fund for a poor student who cannot afford them! Public praise!!

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி- எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் – புவனேஸ்வரி இவர்கள் கூலி வேலை செய்து தங்களுடைய மகன் மோகன்ராஜ் மகள் நிவேதா ஆகியோர்களை பொறியியல் பட்ட மேற்படிப்பு படிக்க வைத்தனர். இதில், எதிர்பாராத விதமாக நடராஜ் என்பவர் சென்னையில் சாரம் கட்டும் பொழுது தவறி விழுந்து 22.04.2025 அன்று இறந்துவிட்டார். இதனால், இறுதியாண்டு கணினி அறிவியல் பொறியியல் படிப்பு பயின்று வரும் மாணவன் மோகன்ராஜ்-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தனது, கணவர் நடராஜ் இருந்தவரை கஷ்டப்பட்டு தன்னுடைய மகன்களை படிக்க வைத்ததாகவும் தற்பொழுது கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகையால், தன்னுடைய மகனுடைய கல்வி கட்டண செலுத்துவதற்கு உதவி செய்ய வேண்டி கலெக்டர் அருண்ராஜ் – விடம்கடந்த வாரம் மனு அளித்தார். மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த கலெக்டர், கல்லூரி கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.65 ஆயிரத்தை தன் விருப்ப நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து, கல்லூரியில் கல்வி மற்றும் இதர கட்டணம் வரவோலையாக பெற்று வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ECS மூலம் வரவு வைத்த, அந்த வரவோலையினை கலெக்டர் அருண்ராஜ், மாணவனின் தாயார் புவனேஸ்வரியிடம் வழங்கினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!