Perambalur: Cooperative banks deny loans to thousands of farmers citing CIBIL!

தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்த்து வந்த நிலையில், தற்போது கூட்டுறவு வங்கிகளிலும், சிபில் ஸ்கோர் பார்த்து கடன் வழங்க தொடங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அ

விவசாயிகளுக்கு, அரசு ஊழியர்கள் போல 1ம் தேதியானால் சம்பளம் கிடைக்காது. அரசு மற்றும் தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பிற்கான நிலுவைத் தொகை மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி வழங்கப்படும் நிலையில் நிலைமை உள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு விலையை அவர்களே நிர்ணயிக்க முடியாத நிலையும் உள்ளது. அவர்கள் இதனால், உழைத்து செய்த பயிரை, அறுவடை களத்திற்கு கொண்டுவந்து சேர்த்தால் மட்டும் போதாது, சந்தையில் நல்ல விலைக்கு விற்றால் மட்டுமே ஓரளவு தற்போது விலைவாசி உயர்வு, ஆட்கள் சம்பள உயர்வை தாண்டி மீதி எஞ்சியிருப்பதே விவசாயிகளுக்கு ஆதாரம்!

இந்நிலையில், உழவர்களின் நிலை அறியாமல், சிபில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம கூட்டுறவு வங்கிகள் ஆயிரணக்கணக்கானோருக்கு சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை காரணம் காட்டி கடன் வழங்க முடியாது என அறிவித்துள்ளது. இதனால், ஆடிப்பட்டம் சாகுபடிக்கு தயாரான விவாசயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடி மாதத்தில், நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், ராகு, கேழ்வரகு, பயிறு மற்றும் தானிய வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நொந்துபோய் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும், உழவர்கள், உழவர்கள் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!