Perambalur: Eppadio Ka Vithai yaki ponathu! Book launch ceremony!!
பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ க’விதை’யாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் வ. சந்திரமவுலி தலைமையில் நடந்தது. அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் மணிகண்டன், அ. செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவிப் பேராசிரியர் ஸ்ரீதர் நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பாவேந்தன், கவிஞர் நீ. ராதாகிருஷ்ணன் எழுதிய எப்படியோ க’விதை’யாகிப் போனேன் எனும் கவிதை நூலை வெளியிட, அதை மூத்த செய்தியாளர் ரா. சிவானந்தம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீதர் நூல் அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் க. குமணன் வாழ்த்துரை வழங்கினார். நூல் ஆசிரியர் கவிஞர் நீ.ரா என்கிற நீ.ராதாகிருஷ்ணன் ஏற்புரையற்றினார். நிகழ்ச்சியை கல்லூரி மாணவி தே. தீபா தொகுத்து வழங்கினார். இதில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லூரி மாணவி ந. நர்மதா வரவேற்றார். மாணவி ர. நதியா நன்றி கூறினார்.