Perambalur: Equality Pongal festival organized by VCK! Held under the leadership of District Secretary Krishnakumar!!

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா, மகளிர் விடுதலை இயக்க ஏற்பாட்டிலும், துறைமங்கலத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் கவுன்சிலர் தங்க.சண்முகசுந்தரம் வரவேற்றார். மகளிர் விடுதலை இயக்கக மாவட்டச் செயலாளர் ரேணுகா வேல்முருகன், ம.வி.இ மாநில துணைச் செயலாளர் செல்வாம்பாள், சிறப்பு விருந்தினர்களாக, இஸ்லாம், கிறிஸ்டியன், புத்திஸ்ட், இந்து மதங்களை சேர்ந்த முகமது இப்ராஹிம், ஜெய்தும்பி, பாதிரியார் சார்லஸ், போதி பகவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் வீரசெங்கோலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மண்டலச் செயலாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மாநில துணைச் செயலாளர் கராத்தே பெரியசாமி, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பாவணண், ஆகியோர் சிறப்புரையாற்றினர். செய்தி தொடர்பாளர் அழகுமுத்து மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை செயலாளர் வீரலட்சுமி, நகர செயலாளர் சுமதி, நகர துணை செயலாளர் சுந்தராம்பாள், ஒன்றிய பொருளாளர் திலகவதி, ஒன்றிய துணை செயலாளர் வனிதா, ஒன்றிய துணை செயலாளர் ஜமுனா ராணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயப்பிரியா, திருச்சி மாநில துணை செயலாளர் கஸ்தூரி அம்மாள். திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர்லெசி, நகர செயலாளர் சரண்யா. நகர துணை செயலாளர் சித்ரா மற்றும்,

ஒன்றியச் செயலாளர்கள்: வெற்றியழகன், இடி முழக்கம், பிச்சைப்பிள்ளை, நாட்டார்மங்கலம் தயாளன், கேட் மணி, மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் கரு.அய்யம்பெருமாள் முற்போக்கு மாணவர் கழகம்,
மேலப்புலியூர் அய்யாகண்ணு, முரசொலி, அ.பழனிவேல்ராஜா,பாலன் மாவட்ட துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் மணிமாறன், அருண், தென்றல் சரவணன், சரண்ராஜ், அம்பேத் கோகுல் , இளவரசன், சிறுவாச்சூர் மாரிமுத்து ஜீவா, ஆழ்வார், தமிழரசன், ராம்குமார் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks