Perambalur: Free CCTV camera and alarm smoke detector training for men!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் சேவை, பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் அமைத்தல் பயிற்சி வரும் 21-07-2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது, 13 நாட்கள் இப்பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். அப்போது, மதிய உணவு, காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதோடு, வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 44 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம், உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை , நூறு நாள் வேலை அட்டை (குடும்பத்தில் எவரேனும்) 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பான் அட்டை ஆகியவற்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04328-277896, 8489065899, 9488840328 என்ற தொலைப்பேசிகள் மூலமாக தொடர்பு கொள்ளலாம், என பயிற்சி மைய இயக்குனர் முருகையன் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!