Perambalur: House-to-house census work being carried out by frontline workers in the district; Collector’s information!
உரிமைகள் திட்டத்தின் கீழ் சீட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முன் களப் பணியாளர்கள் மூலம் நகர்புறம் மற்றும் ஊரக பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மாற்றுத் திறனாளிகளையும், பொதுமக்களையும் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் இல்லம் தேடி வரும் முன் களப்பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்கி பொது மக்கள் (ஆதார் கார்டு, ரேசன் கார்டு) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (ஆதார் கார்டு. ரேசன் கார்டு மருத்துவ சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை சரிபார்க்க மட்டுமே) அனைவரும் இந்த சமூக தரவு கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுக்கும் பணி சிறப்பாக அமைய உதவிட வேண்டும் எனவும், மேலும் இது தொடர்பான விவரங்கள் தேவையிருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.