Perambalur: Instructor job for competitive exams; Collector’s announcement!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகள் வாயிலாக அதிகளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக சிறந்த பயிற்றுநர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பயிற்சி வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு எடுக்க விருப்பமுள்ள அனுபவமிக்க பயிற்றுநர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு – (Resume) ஆதார் அட்டை, கல்விச்சான்று நகல்கள், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ 18.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்களது விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த பயிற்றுநர்களுக்கு பயிற்றுநர் மதிப்பீட்டு குழு வாயிலாக அவர்களது கற்பிக்கும் திறன் சோதித்தறியப்பட்டு குழுவின் மதிப்பீட்டறிக்கை வாயிலாக பயிற்றுநர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் 04328-296352 அல்லது 94990 55913 என்ற தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!