Perambalur: Land title deeds should be issued to the residents of Pasumbalur Ambedkar Nagar; a resolution passed at the VCK meeting!

பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூர் கிராமத்தில் விசி கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் வேர்களைத் (மக்களை) தேடி பயணம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிளை மறுசீரமைக்கபட்டு, புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக வே.தேவேந்திரன், பொருளாளராக பெ.ராமர், துணை கிளை செயலாளர்களாக கா.வாசுதேவன், தினேஷ் சசிகுமார் , ராஜ்குமார் ஆகியோரும், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கிளை செயலாளர் நா.மணிவண்ணன், கிளை பொருளாளர் அ.பிரதீப், துணை கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன் , வேல்முருகன்,அருள், அன்பழகன், மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளை செயலாளர் வெ.மின்னல்கொடி கிளை பொருளாளர் பொன்மணி, துணை கிளை செயலாளர்கள் சசிகலா மற்றும் பிரமலா, ஜெய சித்ரா,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர்.வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மா.இடிமுழக்கம் ஒருங்கிணைப்பு செய்தார்.

கூட்டத்தில், பசும்பலூர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் உள்ள மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும், நூலகம் அமைத்துதர வேண்டும், அம்பேத்கர் நகர் தெருக்களுக்கு மெட்டல் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் , பசும்பலூர் கிராம மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலை நிறுவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசிக மண்டலச் செயலாளர் ஸ்டாலின் , நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர்மன்னன், மாநில துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, கராத்தே.பெரியசாமி, செல்வாம்பாள் ம.வி.இ மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர்கள் அய்யம்பெருமாள், ஆதிராஜா, மாவட்ட துணை அமைப்பாளர் ராமர், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் வடிவேல் பழனி முத்து, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்செல்வன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சேர்ந்த சையது அலி, சித்திக் பாஷா, அம்பேத் கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!