Perambalur: Life sentence for teacher who raped and deceived a woman by promising to marry her: Court verdict!

பெரம்பலூர் மாவட்டம், சீதாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு அவர் 18 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே 2009 ஆம் ஆண்டு அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர் ஆனால், அந்தப் பெண்ணுக்கு அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில், பாடாலூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சீதாராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் வயது 38 என்பவர் அந்தப் பெண்ணுடன் 3 ஆண்டு காலம் பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவில் ஈடுபட முயற்சித்துள்ளார். அந்த பெண் திருமணத்திற்கு பிறகு தான் எல்லாம் என கூறியுள்ளார்.

செல்வம் அந்தப் பெண்ணை கடந்த 30.03.2018 ஆம் தேதி மருதையான் கோவிலில் வைத்து மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டி கழுத்தில் கட்டி திருமணம் செய்து விட்டதாக சொல்லி அந்த பெண்ணை சீதாராமபுரத்தில் உள்ள அவரது கடைக்கு அழைத்து சென்று பலவந்தமாக அந்த பெண் மறுத்தும் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கருவுற்ற தன்னை செல்வத்தின் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கேட்டபோது மறுநாள் அழைத்துச் செல்வதாக செல்வம் கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னர் அழைத்துச் செல்ல மறுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் 07.09.2018 ஆம் தேதி செல்வத்தின் வீட்டிற்கு சென்று செல்வம் தன்னுடன் உடலுறவு கொண்டு தான் கர்ப்பமாக இருக்கிற விபரத்தை கூறிய போது செல்வத்தின் அப்பா பெரியசாமி அண்ணன் தர்மராஜ் அம்மா செல்வி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணை அசிங்கமாக திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் தாக்கல் செய்தார். நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவின் படி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வம் பெரியசாமி தர்மராஜ் செல்வி ஆகியோருக்கு எதிராக Cr.No : 07/19 U/s U/S 294(B) ,323,417,376,506(1),And 4of TNPWH Act. கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் செல்வம் ஆகியோருக்கும் செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெண் குழந்தைக்கு செல்வம் தான் உயிரியல் தந்தை என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எம் சுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார். அரசு தரப்பில் செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றம் மற்றும் ஏமாற்றுதல் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ஏமாற்றிய குற்றத்திற்காக செல்வத்திற்கு ஒரு வருடம் கடும் காவல் சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தும், கற்பழிப்பு குற்றத்திற்காக செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கினார்.

குற்றம்சாட்டப்பட்ட பெரியசாமி, செல்வி, தர்மராஜ் ஆகியோர் மீது அசிங்கமாக திட்டுதல், சொற்ப காயம் விளைவிளைத்தல், மிரட்டுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் அந்த குற்றங்களில் இருந்து அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!