Perambalur: Minister S.S. Sivasankar inaugurated the extension of bus services on 11 routes.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓகளூர், அகரம்சீகூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ,  மாணவிகள் பயன்பெறும்  வகையில் 8 நகரப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகளின் வழிதடங்களை நீட்டிப்பு செய்து பேருந்து சேவைகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தாழ்தளப்பேருந்துகள், மின்சாரப்பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் எளிதில் ஏறும் வசதி கொண்ட பேருந்துகள், BS VI ரகப் பேருந்துகள், CG பேருந்துகள் என பல்வேறு வகையான புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி வருகின்றார்கள். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய பேருந்துகளை நம் முதலமைச்சர் வழங்கியுள்ளார். மக்களின் நலன் கருதி புதிய பேருந்துகளையும், புதிய வழித்தடங்களையும், வழித்தட நீட்டிப்புகளையும் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓகளுரிலிருந்து பெரம்பலூர் – ஆடுதுறை வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை காலை, மாலை ஒகளூர் வரையிலும், வயலப்பாடியிலிருந்து, அரியலூர் வேப்பூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்தை 10 நடைகள் வயலப்பாடி வரையிலும், அரியலூர் முதல் சன்னாசிநல்லூர் வரை இயக்கப்படும் புறநகர் பேருந்தை  காலை, மாலை நீட்டிப்பு செய்தும் இன்று பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும், ஓலைப்பாடியிலிருந்து, ஜெயங்கொண்டம் – குழுமூர் – காரைப்பாடி – வயலப்பாடி – ஓலைப்பாடி – கல்லை வழியாக  வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்லும் வகையில் புறநகர்ப்பேருந்தை வழித்தட நீட்டிப்பு செய்தும், பெரம்பலூர் – வேப்பூர் வரை  இயக்கப்படும்  நகரப் பேருந்தை 4 நடைகள் ஓலைப்பாடி வரையிலும்,

பெரம்பலூர் – வேப்பூர் செல்லும் நகரப்பேருந்தை ஆய்குடி வழியாகவும், பெரம்பலூர் – வேப்பூர், சித்தளி, எழுமூர் வழியாக இயக்கப்படும் நகர பேருந்தை சித்தளியிலிருந்து அசூர் வழியாக எழுமூர், வேப்பூர் வரையிலும், பெரம்பலூர் – எழுமூர் – முருக்கன்குடி வழியாக இயக்கப்படும் நகரபேருந்தை மழவராயநல்லூர், காருகுடி, முருக்கன்குடி வழியாகவும், அரியலூர் – சென்னை  செல்லும் புறநகர் பேருந்தை வரகூர் வரையிலும், பெரம்பலூர் கிளியூர் வ.அகரம் வரை இயக்கப்படும்  நகர பேருந்தை கிழுமத்தூர் வரையிலும், குன்னம் – ஆய்குடி – எழுமூர், கீழப்பெரம்பலூர் – சின்னாறு, தொழுதூர் வரை இயக்கப்படும் நகர பேருந்தை எழுமூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி வரையிலும்  நீட்டிப்பு செய்து, அனைத்து பேருந்து சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், அட்மா  தலைவர் வீ. ஜெகதீசன், துணை மேலாளர்  புகழேந்தி ராஜ், கோட்ட மேலாளர் ராம்குமார், பிடிஓ சேகர், அறிவழகன், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வேப்பூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகு.நீலமேகம், மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!