Perambalur: On World Disability Day, Minister Sivashankar distributed welfare assistance worth Rs. 91.54 lakhs to 102 beneficiaries.

பெரம்பலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 102 பயனாளிகளுக்கு ரூ.91.54 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழச்சி கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் நடந்தது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23 ஆண்டில், 4,589 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 கோடியே 49 லட்சத்து 42 ஆயிரத்து 260 மதிப்பிலும், 2023-24 ஆண்டில் 4,417 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 542 மதிப்பிலும், 2024-25 ஆண்டில் 4,766 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 கோடியே 91 லட்சத்து 44 ஆயிரத்து 470 மதிப்பிலும் என கடந்த ஐந்தாண்டுகளில் 13,772 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24 கோடியே, 76 ஆயிரத்து 272 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

71 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து, ஆயிரத்து 800 வீதம், மொத்தம் ரூ.72 லட்சத்து 27 ஆயிரத்து 800 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ.18 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பில் மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், 15 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 359 மதிப்பில் ரூ.95 ஆயிரத்து 385 மதிப்பில் தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சத்து 53 ஆயிரத்து 585 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 21.11.2025 அன்று நடத்தப்பட்ட செவித்திறன் குறைபாடுடையோர், இயக்க திறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட திமுக பொறுப்பாளரும், அட்மா சேர்மனுமான வீ.ஜெகதீசன், ஆர்.டி.ஓ அனிதா, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் பூலாம்பாடி பாக்கியலட்சுமி செங்குட்டுவன், குரும்பலூர் சங்கீதா ரமேஷ் , அரும்பாவூர் ர.வள்ளியம்மை, நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், அழகு.நீலமேகம், நல்லத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள், அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!