Perambalur: People block road, alleging that their community is being ignored during the upcoming chariot festival!
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரம்பலூர் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நாளை நடக்க இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முன்பாக
ஒரு சமூகத்தினர் ன நேற்று மாலை ஊரில் தண்டோரா போட்டு திருவிழா மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளனர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு முன்பாக திருவிழா நடத்துவதற்கான தேதி மற்றும் நிகழ்ச்சியை மற்றொரு சமூகத்தினர் தன்னிச்சையாக அறிவித்ததை கண்டித்தும் மற்றொரு பிரிவினர் இன்று காலை செங்குணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, மருவத்தூர் போலீசார் மற்றும் வரூவாய் துறையினர் முன்னிலையில் பேச்சு வார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்,