Perambalur: People’s Grievance Redressal Day meeting; Collector Arunraj distributed free housing land titles to 20 people!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. வருவாய் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு புதிய குடும்ப அட்டையையும் கலெக்டர் வழங்கினார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 394 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.