Perambalur: Persons with disabilities can apply to obtain a free bus pass; Collector informs!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் 31.01.2026 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) நடைபெறவுள்ளது. இதுநாள் வரையில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது தற்போது, ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, 12.01.2026 முதல் 31.01.2026 வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற 13 நாட்களுக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் வழியாக இலவச பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பித்தல், பல வகை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு செல்வோர், கல்லுாரிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் மாணவ , மாணவியர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் மாற்றுத்திறனாளிகள், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் அவர்களது துணையாளர் ஆகியோர்களுக்கு பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த முகாமிற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது UDID, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று, பணிபுரியும் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான சான்று, மருத்துவமனையின் மருத்துவ அலுவலரின் சான்று, கல்வி நிறுவனத்தின் சான்று, ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1 ஆகியவற்றைக் கொண்டு வந்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks