Perambalur: Police house robbery in broad daylight; gold and diamonds worth Rs. 30 lakhs stolen!

பெரம்பலூர் நகரில் பட்டப் பகலில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரது வீட்டில் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க மற்றும் வைர நகைகள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ள சம்பவத்தால் பெரம்பலூர் நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர் காவலர் பிரசாந்த். இவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள முத்துலட்சுமி நகரில் குடியிருந்து கொண்டு காவலர் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை காவலர் பிரசாந்த் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான களரம்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு இன்று மாலை சுமார் 5 மணி அளவில் வந்து வீட்டை பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் பிரசாந்த் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நெக்லஸ், வளையல், மோதிரம் உள்ளிட்ட 15 சவரன் தங்க நகைகளும், வைர நெக்லஸ் வைரத்தோடும் திருடு போனதோடு பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருடப்பட்டிருந்தது. இதனை அடுத்து காவலர் பிரசாந்த் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி காட்சிகளைப் கைபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் நகரில் பட்டப் பகலில் காவல் துறையில் பணியாற்றும் ஒருவரது வீட்டிலேயே திருடர்கள் புகுந்து கைவரிசை காட்டிய சம்பவம் பெரம்பலூர் நகர மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு காவல்துறையினருக்கு திருடர்கள் சவால் விடுத்துள்ளது போன்று உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!