Perambalur: Pongal festival celebrated with the tribal people; the Collector and officials from various departments participated!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து மலைவாழ் மக்களோடு நடத்திய பொங்கல் விழா மலையாளப்பட்டி கிராமத்தில் கலெக்டர் ந.மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பொங்கல் விழாவில் கலந்து கொள்ள கலெக்டர் ந.மிருணாளினி மற்றும் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்து மலையாளப்பட்டி கிராமத்திற்குச் சென்றார். அக்கிராம மக்கள் கலெக்டரை ஆரத்தி எடுத்து குலவை பாடி வரவேற்பு அளித்தனர். பின்னர் கிராமத்துக் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர், பொதுமக்களோடு கலெக்டர் பொங்கல் வைத்து சிறப்பித்தார். கரகாட்டம், கும்மியாட்டம், பொய்க்கால் ஆட்டம், மயிலாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் மங்கல இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் மழைவாழ் மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கும் கலெக்டர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நினைவுப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
மாவட்ட திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர்நல அலுவலர் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமாயி, ஜெயபாலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497