Perambalur: Pongal festival in Malayalapatti village; Collector extends invitation!

2026 பொங்கல் சுற்றுலா விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு தமிழக கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் நாளை காலை நடக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கிராம மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த பொங்கல் விழாவில், தமிழ்நாட்டின் பரதம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நிகத்தப்படவுள்ளது.
கிராமிய மணம் சார்ந்த இந்நிகழ்வில், மக்களோடு மக்களாக அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இயற்கை எழிலார்ந்த பச்சை அடிவாரம் மலையாளப்பட்டி கிராமத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் திராளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497