Perambalur: Private sector job fair; Collector information!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன காலிப்பணியிட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணி முதல் 2.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும், மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 9499055913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெருமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497