Perambalur: Public demands ban on political parties holding meetings inside the new bus stand!

Perambalur New Bus Stand

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு திருப்பதி, திருத்தணி, காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை, நாமக்கல், சேலம், பெங்களூரு, கள்ளக்குறிச்சி என தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து இயக்குப்படும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும், நகரப் பேருந்துகளிலும் ஆயிரணக்கணக்கானனோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகள் புதிய பேருந்து நிலையத்தில் புற நகர் பேருந்து செல்லும் பகுதியை இடைமறித்து ஆக்கிரமிப்பு செய்து கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல!! ஆனால், பேருந்துகள் இடம் மாறி நிறுத்தப்படுவதால் பயணிகள் குழம்பி தங்களுக்கான பேருந்துகளை தேடி அலைந்து சிரமப்படுகின்றனர். அதோடு, வழக்காமாக இயங்கும் பேருந்துகளை இயக்கவும், ஓட்டுனர் அவதிப்படுகின்றனர். கட்சி கூட்டங்களில் கலவரமோ, அல்லது வேறு அசம்பாவிதங்கயோ கரூர் போன்று நடந்தால், பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகள், பெண்கள், குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அளவிற்கு அதிமான மக்கள் கூடுவதால் அதிகளவு சுகாதர கேடு ஏற்படுத்தும் வகையில் சுகாதார கேடு உண்டாகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், அரசியல் அனுமதிக்க கூடாது என்றும் வருங்காலங்களில் கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!