Perambalur: School student commits suicide by falling into a well?! Police investigating!!

பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் பிருந்தாதேவி (16). இவர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிந்து வந்தார். நேற்று மாலை முதல் காணவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இன்று காலை பிருந்தாதேவியின் காலணிகள் ஊரின் அருகே உள்ள வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் மேல் பகுதியில் கிடந்துள்ளது. இதனைக் கண்ட உறவினர் மருத்தூர் போலீசாருக்கு கொடுத்தனர். தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு, பிருந்தாதேவியின் உடலை கிணற்றுக்குள் இருந்து மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி படிக்கும் மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!