Perambalur: Severe traffic jam on the national highway; continued negligence by the authorities!!

பொங்கல் விழா முடிந்து சென்னை செல்லும் வாகனங்களும், வடதமிழகத்தில் இருந்து தமிழ் நாட்டிகன் தெற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றன.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் – இருர் பகுதிகளில் ஓராண்டு காலமாக மேம்பால பணி நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலையில் ஒரே நேரத்தில், ஒரே திசையில் இருவாகனங்கள் செல்ல முடியாது. ஒன்றன் பின் ஒன்றாகவே சென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்பித்துள்ளது. இதனால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கார், பஸ்கள் அணிவித்து நிற்கின்றன. உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மேம்பால துரிதப்படுத்த பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497