Perambalur: Special camp for transgenders; 50 people participated!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். திருநங்கை அடையாள அட்டை, ஆதார், ஆதாரில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத், திறன் மேம்பாட்டு பயிற்சி துறையின் மூலமாக வேலைவாய்ப்பு தொடர்பான திறன் பயிற்சி புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்காக மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலமாக சிறப்பு கடன் உதவிகள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக 20 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், திருநங்கைகளுக்கு சுய தொழில் செய்திட மானியம், சுயதொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி, வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு வழங்கிடவும் மற்றும் வீட்டுமனை இல்லாத திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கிடவும் நடவடிக்கையும், திருநங்கைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. சமூக நலத்துறை, மகளிர் திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.