Perambalur: Special camps for the Puthirai Vannar community; Collector informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் புதிரை வண்ணார் மக்களுக்கு சமூக சான்றிதழ், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் சார்பாகவும், மேலும், வீடுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதன் வாயிலாக புதிரை வண்ணார் மக்களின் சமூக பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 28.01.2026 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரையிலும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 29.01.2026 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரையில் முகாம்கள் வட்டாட்சியர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. புதிரை வண்ணார் மக்கள் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497