Perambalur: Student leader elections at Siruvachur Almighty Vidyalaya Public School! The elections were conducted through a mobile app, just like an election.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர்கள் தேர்வு, மக்கள் பிரதிநிதிகள், தலைவர்களை தேர்வதை போன்றே தேர்தலை போன்றே போட்டியிட்ட மாணவர்களின் சின்னங்கள், புகைப்படங்களுடன் மொபைல் ஆப் வழியில் நடத்தப்பட்டது. போட்டியிட்ட மாணவர்களின் பெயர் புகைப்படங்களுடன் சின்னங்களும் அறிவிக்கப்பட்டது.
EVM எலக்ட்ரானிக் வாக்கு மிஷின் முறையில் மொபைல் ஆப் வழியாக வாக்களிக்கும் முறை நடத்தப்பட்டது. அதில் பள்ளி மற்றும் வகுப்பு மாணவர்கள் தலைவர், துணைத் தேர்தல் தேர்வு செய்யப்பட்டனர். வாக்களித்தற்கான அடையாளமாக மாணவர்களுக்கு கை விரலில் மையும் வைக்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார், பள்ளி முதல்வர்வர்கள் சாரதா, சந்திரோதயம், துணை முதல்வர் ராஜேந்திரன் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.