Perambalur: Students who went to herd goats and cows with relatives drowned in a lake!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (13), அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரங்கநாதன் மகள் செல்வக்கனி (12), அங்குள்ள தனியார் பள்ளியில் 6ம் படித்து வந்தார். இரு மாணவிகளும் இன்று பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் உறவினர்களுடன் ஆடு, மாடுகளை மேய்க்க வெங்கலம் பெரிய ஏரிக்குள் சென்றிருந்தனர். அங்கு ஏரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் விளையாடிவர்கள், நீரில் மூழ்கிவிட்டனர். இதைப்பார்த்த புஷ்பாவின் சித்தி பூங்கொடி கொடுத்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் இரு சிறுமிகளையும் மீட்டு, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் 2 சிறுமிகளும் இறந்து விட்டதாக தெரிவித்தார். இரு சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497