Perambalur: Tamil Nadu in Orani – Resolution passed at the district DMK executive committee meeting to induct new members into all houses!

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் – தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன்- ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரது இல்லங்களுக்கும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது எனவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் “வெல்வோம் இரு நூறு படைப்போம் வரலாறு” எனும் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற வகையில் BLA2,BLC,BDC ஆகிய விபரங்களை விரைவாக ஒப்படைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் செ.நல்லதம்பி, சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம்,

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், ஆர்‌.அருண், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வி.சி.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன்,

மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஏ.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!