Perambalur: Tamil Nadu Vetri Kagamagan leader Vijay granted police permission to campaign in 2 places with conditions!

தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) சார்பாக அதன் தலைவர் விஜய் வரும் 13.09.25 ஆம் தேதியன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிறுத்தம் மற்றும் பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரையாற்ற நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி வழங்கினர்.

பெரம்பலூர் காமராஜர் வளைவு அனுமதிக்கப்பட்ட இடமாக இல்லாததாலும், பொது மக்கள் அதிகம் சென்று வரும் வழித்தடமாகவும், போக்குவரத்து இடையூறுகள் மற்றும் நெருக்கடியான இடமாகவும் இருப்பதால் அங்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, அவ்விடத்திற்கு பதிலாக, அனுமதிக்கப்பட்ட இடமான மேற்கு வானொலி திடலில் பிரச்சாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், குன்னத்தில் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடத்த கோரிக்கையின் படி அனுமதிக்கப்பட்டுள்ளது. பரப்புரை நடக்கும் இடத்திற்கு வரும் கட்சியினர் ஒரு மணி நேரம் முன்னதாகவே பரப்புரை நடக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

பிரச்சாரத்திற்கு வரும் த.வெக தலைவர் அரியலூரில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மருதையான் கோவில் வழியாக குன்னம் பேருந்து நிறுத்தம் வந்து பரப்புரை முடித்து பின்னர் மேலமாத்தூர், பேரளி வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை, சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் வரும் போது சாலை வலம் (Road show) நடத்தக் கூடாது. மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. இதைத்தவிர அவர் பயணம் செய்யும் வாகனத்தின் முன்னும் பின்னும் தங்களது கட்சியினர் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ, நான்கு சக்கர வாகனங்களிலோ ஊர்வலமாக வரக்கூடாது. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. பரப்புரைக்கு பங்கேற்க வருகை தரும் கட்சியனர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது மேலும் பயண வழிப்பாதையில் இசைக்குழு பயன்படுத்தக்கூடாது

பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு உண்டான பார்க்கிங் வசதிகள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பார்க்கிங் வசதிகள் எங்கெங்கு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து முன்னரே அறிவிக்கப்பட வேண்டும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வருவதை தவிர்த்திட வேண்டும் பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளா வண்ணம் எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது. பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி மற்றும் முதல் உதவி சாதனங்கள் / ஆம்புலன்ஸ் /தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும். போக்குவரத்தை சரிசெய்யும் பொருட்டும், பரப்புரை நடைபெறும் குன்னம் பேருந்து நிறுத்தம் மற்றும் பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் பகுதியில் கட்சியினரை போதுமான ஒழுங்குபடுத்துவதற்கும், காவல்துறையினருக்கு உதவியாக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பரப்புரையின் போது தாங்கள் மற்றும் தங்கள் அமைப்பினர் பிறர் மனம் புண்படும் வகையிலோ, பிற மதத்தினரை ஜாதி நடந்துகொள்ளக்கூடாது. காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வரவேண்டும். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்

பரப்புரைக்கு பெட்டி வடிவ ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ குழாயை கட்டாயம் பயன்படுத்த கூடாது. ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத அளவிற்குள் இருக்க வேண்டும்.

பரப்புரைக்கு மாவட்டம் வாரியாக யாருடைய தலைமையில், எத்தனை வாகனங்களில், எவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் என்ற எண்ணிக்கை விபரமும், தலைமை தாங்கி அழைத்து வரும் பிரதிநிதிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களும் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

பரப்புரையின் போது எந்தப் பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ, சேதம் ஏற்படுத்தக்கூடாது அவ்வாறு சேதம் ஏற்படுத்தி குற்றம் செய்கை நடைபெறும் பட்சத்தில் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்

பரப்புரை நடைபெறும் குன்னம் பேருந்து நிறுத்தம் மற்றும் பெரம்பலூர் மேற வானொலி திடல் ஆகிய பகுதியில் உள்ள அரசு. மற்றும் தனியார் கட்டிடங்கள் காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள் (EB Lamp posts), மின் கம்பங்கள் (EB posts), மின் மாற்றிகள் (EB Transformers); வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்). கொடிக்கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்த வேண்டும். 17. பரப்புரை முடிந்த உடன் அதில் கலந்து கொண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும், மற்ற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இருபுறங்களிலும் ப்ளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க அனுமதியில்லை. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.

பரப்புரை நடைபெறும் இடமான குன்னம் பேருந்து நிறுத்தம் மற்றும் பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் ஆகிய பகுதியிலும், பிரச்சாரத்திற்கு வரும் தவெக தலைவரின் பயண வழிப்பாதையிலும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாதவாறு நடந்து கொள்ள வேண்டும் இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து விதிமுறைகள் மற்றும் காவல் அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி நடப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல் துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது மேலும், அதற்காக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!