Perambalur: Thai Amavasya; Annadanam (free meal distribution) at the Sri Muthumariamman temple in Sangupettai!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் தை அமாவாசையை முன்னிட்டு அம்மன் சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களில் அலங்கரித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். 19 வார்டு அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர். கோயில் பூசாரி நீதிதேவன், கோயில் நிர்வாகி கண்ணபிரான் உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497