Perambalur: The Collector helped children who lost their parents in an accident receive accident relief and monthly assistance!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி – சித்ரா தம்பதியினர் கடந்த 04.07.2025 அன்று வெண்பாவூர் அருகே நடந்த சாலை வாகன விபத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்களுக்கு விக்னேஷ் (வயது – 8) மற்றும் ஹரி (வயது – 6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெற்றோர்கள் இறந்து விட்டதால் குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய நிதியுதவி இல்லை என்றும், அதற்கு அரசின் மூலம் நிதி உதவி வழங்கி குழந்தைகளுக்கு உதவிட வேண்டும் எனவும் குழந்தைகளின் பாட்டி கலா ராணி என்பவர் கடந்த 09.07.2025 அன்று கலெக்டர் அருண்ராஜுவிடம் மனு கொடுத்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த கலெக்டர், இரண்டு குழந்தைகளுக்கும் வருவாய்த் துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகையாக ஒரு குழந்தைக்கு ரூ.1,02,500 வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் ரூ.2.05,000க்கான ஆணையினை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாவலரான பாட்டியிடம் வழங்கினார். மேலும், தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு உதவிடும் திட்டமான மிஷன் வத்சாலயா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தலா ரூ.4,000 உடனடியாக கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த கலெக்டர் அருண்ராஜ் அரசிற்கு பரிந்துரைத்தார். இவ்வாறாக மனு அளித்த 5 நாட்களுக்குள் அரசின் மூலமாக கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கு கிடைத்திட உதவி செய்த கலெக்டருக்கு குழந்தைகளின் பாட்டி மனம் உருகி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!