Perambalur: The District S.C-ST Special Court has ordered the Police SP to conduct a re-investigation and file a chargesheet in the case of pouring petrol on a friend and setting him on fire!

பெரம்பலூர் மாவட்டம், பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் செல்வம் (35). மாற்றுத்திறனாளி. அதே ஊரை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் பரமசிவம் (35). இருவரும் நண்பர்கள். கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி ஜெகநாதன் செல்வத்திடம், தனது செல்போனை யாரிடமாவது அடகு வைத்து பணம் பெற்று வரும்படி அனுப்பினார். அவரும் செல்போனை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை பெற்று வந்தார். இருவரும் இரவில் மது அருந்தினர். ஆக.8ம் அதிகாலை போதையில் இருந்த பரமசிவம், செல்வத்திடம் மீண்டும் செல்போன் மீது கூடுதலாக பணம் பெற்றுவர நிர்பந்தம் செய்து உள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பரசிவம், செல்வத்தின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீப்பற்றி எரிந்ததால், நள்ளிரவில் ஊரில் மரண ஓலமிட்டுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செல்வத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார், பரமசிவத்தை தேடிய போது, அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் போலீஸ் பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், உடலில், சுமார் 80 சதவீத தீக்காயமடைந்த செல்வம் 74 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை காப்பாற்ற முடியாது மருத்துவமனை அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது. வீட்டில் உள்ளவர்களின் பராமரிப்பில் இருந்த செல்வம் 8 மாதம் கழித்து 17-04-2024 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். வெளிசென்று தலைமறைவான பரமசிவம், இந்தியாவிற்கு வந்த போது, மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்து தமிழ்நாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் ஜாமீன் பெற்றார் பரமசிவம்.

செல்வத்தின் சகோதரர் முனியன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் தன்னுடைய சகோதரர் இறப்பு குறித்து போலீசார் முறையாக விசாரிக்காதது குறித்து பெரம்பலூரில் இயங்கி வரும், ‘விக்டிம் லீகல் வாய்ஸ்’ என்ற அமைப்பிடம் முறையிட்டார். அந்த அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் சத்தியசீலன், பிரபாகரன், சக்திபாலன், சங்கர் ஆகியோர்கள் உரிய ஆவணங்களுடன் செல்வத்தின் இறப்பு குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் போலீசார் செயல்படாததை சுட்டிக்காட்டி பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி – எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செல்வத்தை தீ வைத்து எரித்த வழக்கை உரிய முறையில் மறுவிசாரணை நடத்தி, குற்றப் பத்திரிக்கையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பெரம்பலூர் போலீஸ் எஸ்.பிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!