Perambalur: Three arrested for breaking into a house and stealing jewellery; 16 pounds of gold and silver items seized!
பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக வீட்டின் கதவுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 5 வழக்குகளில் தொடர்புடைய மூவரை கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 வழக்குகளிலும், மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 வழக்குகளிலும், மற்றும் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 வழக்குகளிலும், வீட்டியின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த. பெரியசாமி மகன் விஜயகாந்த் இவரின் தம்பி தனுஷ் (20) மற்றும் பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் சுரேஷ் (33), மூவரையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பெரம்பலூர் மாவட்டத்தில், கொள்ளையடித்த 16 பவுன் தங்க நகைகள் உள்பட 67 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.