Perambalur: Traders in Kunnam close shop to protest against removal of encroachment!
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் 4 வழி சாலைக்கு நிலம் எடுப்பதில் பாராபட்சம் காட்டுதாக கூறி வணிகர்கள் இன்று கடை அடைப்பு நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூர் -அரியலூர் சாலை, குன்னம் முதல் வேப்பூர் வரையும், குன்னம் முதல் பெரியம்மாபாளையம் வரையும் சாலைகள் உள்ளன. பெரம்பலூர் – அரியலூர் சாலையில் மானாமதுரை முதல் துறையூர் வரை நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசு அறிவித்து இருந்தது. தார்ச்சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பாக கடந்த 24ம் தேதி நிலங்கள் அளக்கப்பட்டு அத்து செய்யப்பட்டது. இந்த சாலையின் இருபக்கமும் மளிகை கடை , ஓட்டல், மருத்துவமனை ஸ்டுடியோ , டீக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கடைகள் உள்ளன
இதில் பெரம்பலூர் அரியலூர் சாலை சுமார் 15 மீட்டர் அகலம் உள்ளது. குன்னம் நெடுஞ்சாலை சார்பாக ஒவ்வொரு புறமும் 6 மீட்டர் அளவிற்கு நிலம் அளக்கப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. குன்னம் நெடுஞ்சாலைத் துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும் சரியான அளவை அளக்கப்பட்டு யாருக்கும் பராபட்சமின்றி வணிகம் செய்து வரும் மக்களுக்கு இழப்பீடு ஏற்படாமலும், வணிகர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் குன்னம் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த கடையடைப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. இந்த கடையடைப்பு போராட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதில், குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.