Perambalur: Traffic disrupted for 8 hours on the Trichy-Chennai National Highway; passengers traveling for Pongal face severe difficulties!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. சிறுவாச்சூர் நாராணமங்கலம் மேம்பாலங்களில் சர்வீஸ் சாலையில் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் செல்லும் வகையில் அகலமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதில்லை. ஆனால், காரை பிரிவுப் பாதையில் அமைக்கப்பட்டுள் மேம்பாலம் சர்வீஸ் சாலை ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் உள்ளது. மேலும், இரூர் மக்கள் அவர்கள் ஊருக்குள் செல்ல ஆலத்தூர் யூனியன் ஆபீஸ் எதிரில் மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் இரூர் பாலப்பணிகள் கிடப்பில் உள்ளதால், அவ்வழி சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நேற்றிரவு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து புறப்பட்ட வாகனங்களும், தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களும் அதிகாலை 4 மண முதல் போக்குவரத்தில சிக்கி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். நண்பகல் சுமார் 12 மணி கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் துரதிஷ்டவசமாக கனரக லாரி ஒன்று லோடுடன் பழுதி நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிலோ மீட்டர் கணக்கில் இருபுறம் வரிசைகட்டி அணிவகுத்து வாகனங்கள் நின்றன. பொதுமக்கள் மாவட்ட எல்- போர்டு அதிகரிகளை சபித்த வண்ணம் சென்றனர். மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சாலை போடும் போது கிடைக்கும் அக்கறையை பொதுமக்கள் சேவைக்கும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என வாகனஓட்டிகள், பயணிகள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். இரு வாகனங்கள் செல்லும் வகையில் திட்ட மதிப்பீட்டை அதிகரித்து கமிசனை எடுத்துக் கொண்டாவது போக்குவரத்து பாதிப்பின்றி செல்ல மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks