Perambalur: Training for farmers to operate and maintain machinery; Collector inaugurated!

பெரம்பலூரில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் அருண்ராஜ், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்து, ரூ.43.20 லட்சம் மதிப்பிலான 32 வேளாண் இயந்திரங்களை ரூ.27.20 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர்தெரிவித்ததாவது:

நடப்பாண்டில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
என தெரிவித்தார். இந்த பயிற்சி முகாமில், வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளர்கள் மற்றும் தனியார் துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். சுமார் 110 விவசாயிகள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயின்று வரும் 100 மாணவர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப விபரங்களை கற்று அறிந்தனர்.

வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், உதவிப் பொறியாளர்கள் வீரபாண்டியன், செல்வி அர்ச்சனா, ஷர்மிளா, ரம்யா, சத்யா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!