Perambalur: Twin baby girls given local medicine died? Police investigating!
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (38), தனலட்சுமி(33) தம்பதியரின் இரட்டைப் பெண் குழந்தைகளான ரேஷ்மா மற்றும் தனுஸ்ரீக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்து வந்த நிலையில், அந்த இரண்டு பெண் கைக்குழந்தைகளுக்கும் வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து வரும் சைதானி(60) என்பவரிடம் நாட்டு மருந்து கொடுத்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளும் உயிரிழந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார், சமூக நலத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தனலட்சுமியிடமும், அவரது பாட்டி சாந்தியிடமும், நாட்டு வைத்தியர் சைதானியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.