Perambalur: Two people, including a woman, were arrested for defrauding the police of around Rs. 14 lakhs by promising to get them a job abroad at a high salary!
வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 13,91,200 மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர் சைபர் க்ரைம் போலீசார்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், மதர்ஸா சாலையில் வசித்து வருபவது மோகன் மகன் அருண்குமார் (34). இவர் கடந்த 8 ஆண்டுகள் துபாயில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், கடந்த வருடம் மே மாதம் ஊருக்கு விடுமுறையில் வந்த போது, அவரது நண்பர் ஆகாஷ் என்பவர் மூலம் வாட்ஸ்அப் செயலி மூலம் பேசிய கோயம்புத்தூர் விலாங்குறிச்சி, சேரன் மாநகர் அடுத்துள்ள காஞ்சி மாநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் மகிழன் (36), பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை எறையூரை சேர்ந்த பக்தகிரி மகள் கவிதா (44), ஆகிய இருவரும் சிங்கப்பூரில் அதிக சம்பளத்தில் வேலை உள்ளதாக கூறியதாகவும், அதனை நம்பி அருண்குமார், அவரது நண்பர்கள் நிவாஸ் மற்றும் சரவணன் ஆகியோர்களிடம் ரூபாய் 13,91,200 பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் அலைகழித்து வந்துள்ளனர்.
இது குறித்து அருண்குமார், நிவாஸ், சரவணன், ஆகிய மூவரும் பெரம்பலூர் சைபர் க்ரைமில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த, மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, சப் – இன்ஸ்பெக்டர் மனோஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார், மகிழன், கவிதா இருவரையும் பிடித்து வந்து நடத்திய விசாரணையில் மோசடி சம்பவம் உறுதியான நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.