Perambalur: ”Ungaludan Stalin” Project starts tomorrow and will run until August 15; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்கி ஆக.15 வரை நடக்கிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் 2வது வார்டுகளில் நாளை தொடங்கும் இம்முகாமில் 36 துறையினர் கலந்து கொண்டு 46 சேவைகளை வழங்க உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருக்கும் 82 ஆயிரத்து 952 பெயர்களுக்கு மனுக்கள் வழங்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட உள்ளது. காவல்துறை உள்பட பல்வேறு துறைகள் கலந்து கொள்ள உள்ளது. மாவட்ட முழுவதும் 86 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதுடன் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். 229 தன்னார்வ மகளிர் சுய உதவி குழுக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முகாம்கள் நடத்தப்படும் விவரங்கள் குறித்து அவ்வப்போது முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார். டிஆர்ஓ வடிவேல் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.